Friday, 23 September 2011


பர்த்தலமேயு சீகன்பால்க் -மிஷனெரி வரலாறு Part 3

 
ச‌ம‌ய‌ க‌லாச்சார‌த்தை குறித்த‌ கூர் உண‌ர்ச்சித் திற‌ன்:

1. சீக‌ன்பால்க்கிற்கிருந்த‌ கூர் உண‌ர்ச்சித் திற‌ன் ம‌க்க‌ளின் மொழியைக் க‌ற்க‌ வைத்த‌து.

சீக‌ன்பால்க்கின் கைவ‌ச‌ம் கிடைத்த‌ ரோம‌ன் க‌த்தோலிக்க‌ மிஷ‌ன‌ரியின் த‌மிழ் இல‌க்க‌ண‌ ப‌ழைய‌தோர் புத்த‌க‌ம்த‌மிழ் இல‌க்க‌ண‌த்தின் விதிக‌ளை அறிந்திட‌ உத‌விய‌து. சாதார‌ண‌ ந‌டைமுறை மொழியைக் க‌ற்றுகொள்வ‌தோடு திருப்திய‌டையாம‌ல் சாஸ்திரிய‌ த‌மிழையும் செய்யுளையும் தூய‌ த‌மிழையும் க‌ற்றார். அவ‌ர்க‌ற்ற‌ த‌மிழ் மொழி ந‌ற்செய்தியை தீர்க்க‌மாக‌ பிர‌ச‌ங்கிக்க‌வும் ந‌ன் முறையில் திரும‌றையை த‌மிழாக்க‌ம்செய்ய‌வும் உத‌விய‌து. அவ‌ர் ம‌க்க‌ள் பேசிய‌ மொழியை பேசிய‌ப‌டியால் அவ‌ர் தெருக்க‌ளில் தோன்றினாலும்,வ‌ய‌ல் வெளிக‌ளில் இருந்தாலும் நூற்றுக்க‌ண‌க்கானோர் அவ‌ரைச் சூழ்ந்து கொண்டு அவ‌ருக்கு ம‌ரியாதைஅளித்து அன்பை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர். ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளை அவ‌ர் சேக‌ரித்து ம‌க்க‌ளின்க‌லாச்சார‌த்தையும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் ஆராய்ந்தார்.

2. சீகன்பால்க்கிற்கு இருந்த கூர் உணர்ச்சி திறன் மக்களின் குறிப்பாக இந்து மக்களின் நம்பிக்கையும்சடங்காச்சாரங்களையும் அறியும்படி செய்தது. இந்தியாவை அவர் அடந்ததும் தன் அருட்பணி நற்பலனளிக்கமக்களைக் குறித்து நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். இந்திய மக்களைக் குறித்த அறிவு,அவர்களுடைய ஆன்மீக அனுபவங்கள் பாரம்பரியங்கள், வேதங்கள், மெய்ஞானம், விஞ்ஞானம்முதலியவற்றை அவர்கள் எழுதிய வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ள பெரிதும் முயன்றார். இதைச் சர்வரச்செய்யும்படி பிரநிதிப்படுத்தும் பெருமக்களோடு நேரடியாகவும் கடித மூலமும் தொடர்புகொண்டு கற்றுஅறிந்துகொண்டார்.

3. சீகன்பால்க்கிற்கிருந்த கூர் உணர்ச்சி திறன் பல ஸ்தல கலாச்சார வழக்கங்களை எடுத்துகிறிஸ்தவத்திற்கேற்ப மாற்றங்களை செய்ய உதவியது.

சீகன்பால்க் நல்ல வரம் பெற்ற இசை ஞானியாக இருந்தபடியால் துவக்கத்திலிருந்தே இந்திய திருச்சபையைநன்றாக பாடல் பாடும் திருச்சபையாக மாற்றியிருந்தார். இந்தியாவுக்கே உரித்தான கதாகலாச்சேபம்முறையைக் கூட நற்செய்தி அருட்பணியில் புகுத்தியிருந்தார். சில நல்ல வழக்கங்களை எடுத்துகிறிஸ்தவத்திற்கு தேவையான மாற்றங்களைச் செய்து பயன்படுத்தினார். திருமணத்தில் மணப்பெண்கள்இந்திய முறைப்படியே தங்களை உடுத்தி அலங்கரித்துக்கொண்டு தெருவில் ஊர்வலம் வந்தனர்.கிறிஸ்தவரல்லாதோர் திருமணத்தை வெகு விமரிசையாக கொண்டாட மிகுந்த கடன்படுவதை பார்த்தசீகன்பால்க் கிறிஸ்தவ திருமணங்கள் வீண் செலவுகளைத் தவிர்த்து ஆடம்பரமின்றி நடந்திடஅறிவுறுத்தினார்.

அடக்க ஆராதனையும் அவ்வண்ணமே மிகுந்த மரியாதையுடன் செய்யப்பட்டது। துக்கப்படும் கிறிஸ்தவகுடும்பத்துடன் திருச்சபையார் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர். அனைவரும் அவ்வில்லத்திற்கு வந்துசற்று அமர்ந்தபின்பு பாடல்கள் பாடி ஜெபித்தனர். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு துக்கத்திலுள்ள மக்களைஆறுதல்படுத்தினர். ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட நேரத்தில் பல மாதங்கள் கிறிஸ்தவ போதனைப் பெற்றபுறமதஸ்தர் கிறிஸ்துவின் பேரில் தங்களுக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படையாக அறிவித்து இந்து மதத்தைவெறுத்து ஒதுக்கினர்.

ஜாதி அமைப்பை பொறுத்த மட்டில் தேவனுடைய வார்த்தை மக்கள் மனதில் கிரியைச் செய்வதையே சீகன்பால்க்நம்பினார். பொறுமையான போதனையினாலும் பயிற்சியினாலும் தேவனுக்குச் சித்தமான வேளையில் இந்தஏற்றத்தாழ்வு திருச்சபையிலிருந்து மறைந்துவிடும் என நம்பினார் இவ்விதமாக இந்திய மயமாக்கப்பட்டதிருச்சபை இந்தியாவில் உருவாக சீகன்பால்க் பல முயற்சிகள் எடுத்தார்.



இளமை மரணம்:
மிஷன் செயலர் வென்ட்(Went) சீகன்பால்க்கை பல இன்னல்களுக்குள்ளாக்கினார். அவருக்கு சீகன்பால்க்கின்மேல்நம்பிக்கையில்லாத்தால் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார். இது மிஷனரிப்பணியை சீகன்பால்க் தொடர்ந்துசெய்ய முடியாதபடி செய்தது. இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு அவரது அனைத்து மாமிச பெலத்தையும்குன்றச்செய்தது. இதன் விளைவாக மிஷன் நிர்வாகக் குழு செயலரால் தொடர்ந்து வந்த நெருக்கடிகளை அவரால்சமாளிக்க முடியாமற் போயிற்று. எனவே ஐரோப்பா சென்று இந்த பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் தனது சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விரும்பினார். ஆனால் அவரது சரீர பெலன் மிகுந்தமனச்சோர்வினால் குன்றிவிடவே மிகவும் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலானார். நாளுக்கு நாள் அவரது பெலவீனம்அதிகரிக்கவே ஐரோப்பா செல்லும் திட்டத்தை கைவிட்டார். தனது வாழ்வை கர்த்தரின் சித்தத்திற்குஒப்புக்கொடுத்தார். "இப்படிப்பட்ட வேதனைகளை நான் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறேன். நான் சுவிசேஷப்பணிக்கு தொண்டு புரிய எப்படியாவது ஆண்டவர் எனக்கு உதவி அனுப்புவார் என்று உறுதியாய் நம்புகிறேன்.இருப்பினும் எல்லாவற்றிலும் அவரது திருவளச் சித்தமே செய்யப்படுவதாக."


1719, பிப்ரவர் 23 ம் நாள் தமிழ் திருச்சபையோரைத் தன்படுக்கையைச் சுற்றிலும் கடைசியாக கூட்டி கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடந்திட அறிவுரை கூறினார். திடீரென தனது கண்களுக்கு முன்பாக தனது கைகளை வைத்து "என் கண்களுக்கு முன்பாக இது மிகவும் பிரகாசமாய்த் தெரிகிறது, இது சூரியன் என் முகத்தில் பிரகாசிப்பதைப் போலிருக்கிறது" என்று கூறினார். அதன்பின் அவரது இறுதி விருப்பமாக "இயேசு கிறிஸ்து என் அரண்" என்ற பாடலின் மெட்டு பியானோவில் வாசிக்கப்பட்டபோது அவர் நித்திய ஓய்வுக்குள் பிரவேசித்தார். இப்படியாக ஜெர்மனியிலிருந்த தன் நண்பனுக்கு முன்னர் எழுதியிருந்தது போல தனது சாட்சியை இரத்தத்தினால் முத்திரையிட்டார்." இளவயதாகிய 36 லேயே தனது உயிரை விட்டார்.


சீகன்பால்க்கின் வாழ்க்கை மற்றும் மிஷனரிப் பணியிலுருந்து அறிந்து கொள்ளும் பாடங்கள்:
1. மிஷனரிப் பணியில் சீகன்பால்க்கிற்கு முழு அர்ப்பணமும் அசைக்க முடியாத தீர்மானமும் இருந்தது. அவரது ஆரோக்கியமற்ற உடல் நிலையிலும் கொடும் வெப்ப சீதோஷ்ண நிலையிலும் தமது திறமைக்கு மிஞ்சி அவர் உழைத்தார். அவருக்கு வாழ்க்கை மற்றும் பணிக்கான குறிக்கோள்களும் நோக்கமும் இருந்தன. இந்த குறிக்கோளை அடைய எந்த வித தியாகமும் செய்ய தயாராயிருந்தார்.


2. தேவனில் அவருக்கு முழு நம்பிக்கையிருந்தது. சிறையில் கூட பவுல் அப்போஸ்தலனைப் போன்று பாடல் பாடி ஜெபித்து, காவலர்களுக்கு மிகுந்த ஆத்மீக தாகத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தினார்.


3. தேவனுடைய வார்த்தையில் அவருக்கு பேரவா இருந்தது. அவரது அன்றாட அலுவலிலே வேத வாசிப்பும்,தியானமும், முக்கிய இடத்தை வகித்தது. தேவனுடைய வார்த்தையைப் படித்ததோடு மற்றவர்களுக்கும் அதனைப் பகிர்ந்து கொண்டார்.


4. கிறிஸ்துவைப் போன்று அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை இந்தியர்களை அதிகமாக கவர்ந்தது. இவர் வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி வாழ்ந்த மற்ற ஐரோப்பியர்களைப் போல நெறித் தவறி வாழாமல் அனுதினமும் பரிசுத்தமாய் வாழ்ந்தார் என்பதை மக்கள் விரைவில் க‌ண்டுகொண்ட‌ன‌ர். ஒழுக்க‌ம் த‌வ‌றி வாழ்ந்த‌ ஐரோப்பிய‌ரின் ம‌த்தியில் சீக‌ன்பால்க் விந்தைத‌ரும் அள‌வில் தூய‌ நெறிக‌ளோடு சாட்சியாக‌ திக‌ழ்ந்தார்.


5. சீக‌ன்பால்க் மிக‌வும் க‌ட்டுப்பாடான‌ வாழ்க்கை வாழ்ந்தார். அதிகாலை தொட‌ங்கி இர‌வு வ‌ரை அனுதின‌ நிக‌ழ்ச்சி நிர‌ல்க‌ளை வ‌குத்து செய‌ல்ப‌ட்டார். ஒரு ம‌ணித்துளி கூட‌ வீணாக‌ செல‌வ‌ழித்த‌து கிடையாது. இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட்டுப்பாடான‌ வாழ்க்கை வாழ்ந்த‌ப‌டியால்தான் குறுகிய‌ கால‌ம் வாழ்ந்த‌ போதிலும் பெரிய‌ காரிய‌ங்க‌ளை ஆண்ட‌வ‌ருக்காக‌ சாதித்தார். "எவ்வ‌ள‌வு கால‌ம் வாழ்கிறோம் என்ப‌து முக்கிய‌ம‌ல்ல‌; எப்ப‌டி வாழ்கிறோம் என்ப‌தே முக்கிய‌ம்" என்ற‌ உண்மையை அனுப‌வ‌மாக்கினார்.


6. அவ‌ர் ஓர் எளிய‌ வாழ்க்கை வாழ்ந்தார். உண‌வு ப‌ழ‌க்க‌த்திலும் ஏனைய‌ வாழ்க்கை முறையிலும் எளிமையை க‌டைப்பிடித்தார்.


7. விக்கிர‌க‌ வ‌ண‌க்க‌த்தை அதிக‌மாக‌ வெறுத்தார். இந்திய‌ர்க‌ள் குறிப்பாக‌ த‌மிழ‌ர்கள் விக்கிர‌க‌ வ‌ண‌க்க‌த்தை விட்டுவிட்டு உண்மையான‌ ஜீவ‌னுள்ள‌ தேவ‌னை வ‌ண‌ங்க‌ வேண்டுமென‌ ஜெபித்தார். அத‌னை போதித்தார்.


8. த‌ன‌க்கு விரோத‌மாக‌ மிஷ‌ன‌ரிப் ப‌ணித்த‌ள‌த்திலும் வீட்டிலும் புற‌ம‌த‌த்தின‌ர்க‌ளாலும் பெய‌ர் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாலும் மிஷ‌ன‌ரி நிர்வாக‌த்தாலும் வ‌ந்த‌ பாடுக‌ளை, நிந்தைக‌ளை, உப‌த்திர‌வ‌ங்க‌ளை உறுதியோடும், அச்ச‌மின்றியும், தியாக‌ உள்ள‌த்தோடும், தீர்க்க‌மான‌ ம‌ன‌துட‌னும் ச‌ந்தித்தார்; அத‌னை ச‌கித்தார்.


9. ப‌ல‌வித‌ தேவைக‌ளோடு இருந்த‌ ஏழைத் த‌மிழ் ம‌க்க‌ளின் மேல் அவ‌ருக்கு ஆழ்ந்த‌ ம‌ன‌துக்க‌மிருந்த‌து. என‌வே ந‌ற்செய்தியை அறிவிப்ப‌தோடு நின்றுவிடாம‌ல், ச‌மூக‌சேவைச் செய்வ‌திலும் த‌ன்னை ஈடுப‌டுத்திக் கொண்டார். இவ்வாறு ந‌ற்செய்தி அறிவிப்புக்கும், ச‌மூக சேவைக்கும் ச‌ம‌ இட‌த்தை அளித்தார்.


10. ம‌க்க‌ளின் க‌லாச்சார‌த்தையும் ச‌ம‌ய‌த்தையும் கூர் உண‌ர்ச்சித்திற‌னால் முழுமையாக‌த் தெரிந்து கொண்டு,கிறிஸ்த‌வ‌த்திற்கு ஒத்த‌வைக‌ளை ஏற்றுக்கொள்கின்ற‌ இன்றைய‌ மிஷ‌ன‌ரிக‌ளின் முய‌ற்சிக்கு அவ‌ர் ஒரு முன் மாதிரியாக‌த் திக‌ழ்ந்தார். ந‌ற்செய்தியை அறிவிக்கும் முறைமைக‌ளை இந்திய‌ மையமாக்குவ‌திலும் சூழ்நிலைக‌ளுக்கேற்ப‌ மாற்றிய‌மைப்ப‌திலும்‌ முன்னோடியாயிருந்தார். இந்திய‌ ஆன்மீக‌ க‌லாச்சார‌த்தில் சுவிசேஷ‌த்தை மிக‌வும் ப‌ய‌ன் த‌ரும் வ‌கையில் பரப்ப கையாண்ட செயல் முறைகள் இன்று நாம் பின்பற்ற தகுந்த மாதிரிகளாய் அமைந்துள்ளன. தமிழ்மொழியைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை பயிலுவதிலும் அவர் காட்டிய ஆர்வமும் அவரது கலாச்சார கூர் உணர்ச்சித்திறனுக்கு எடுத்துக்காட்டு.


11. இந்தியாவில் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமானால் அது வெற்றிடத்தில் பிரசங்கிக்கப்பட முடியாது என்பதை உணர்ந்தார். எனவே யார் மத்தியில் பிரசங்கிக்கும்படி மிஷனரி அனுப்பப்பட்டிருக்கிறாரோ அவர்களின் சிந்தனை, எண்ணம், மற்றும் உலகியல் கண்ணோட்டம் போன்றவற்றை நன்கு அறிந்து அதற்கேற்றார்போல் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற உண்மையை சீகன்பால்க் நமக்கு உணர்த்தியுள்ளார்.


முடிவுரை:
பதிமூன்று ஆண்டுகள் இந்தியாவில் பெருஞ்சேவைச் செய்த பின்பு 1719‍ம் ஆண்டில் தனது 36 ம் வயதில் சீகன்பால்க் மறுமைக்குள் சென்றார். மிகுந்த நெருக்கங்கள், கஷ்டங்கள் மத்தியிலும் மிக குறுகிய காலகட்டத்தில் அவர் கிறிஸ்துவுக்கு இந்திய மண்ணில் சாதித்த சாதனைகளை நாம் படிக்கும் போது அவைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. இந்த பூவுலகில் குறிப்பாக இந்தியாவில் கர்த்தரின் இராஜ்ஜியம் பரம்பிட நம்மை மிஷனரிப் பணிக்கு அர்ப்பணித்து ஆழமாக ஈடுபட இந்த ஆழ்ந்த ஆய்வு நம்மை அழைக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு உழைத்திடும் மக்கள் அநேகர் இன்று இந்திய மிஷனரி பணிக்கு தேவை.

 

No comments:

Post a Comment